
பெரும்பாலான டெல், டொஷீபா, எச்பி, ஐபிஎம் லெனோவா, சோனி போன்ற நிறுவனங்களின் மடிக்கணிணிகளை வாங்கும்போது இன்றைக்கு அவை கூடவே விண்டோஸ் விஸ்டாவோடு கூட வரும்.இவை OEM எனப்படும் original equipment manufacturer மென்பொருள் உரிமமோடு வருகின்றன.அதாவது உங்கள் மடிக்கணிணியோடு கூட வரும் விண்டோஸ் விஸ்டா ஒரிஜினல் விண்டோஸ் விஸ்டாவாகும்.அந்த வின்டோஸ் விஸ்டாவுக்கான விலையையும் சேர்த்து கொடுத்துதான் அந்த மடிக்கணிணியை நீங்கள் வாங்கியிருக்கின்றீர்கள் என்று பொருள். உங்கள் மடிக்கணிணியின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் அந்த பச்சக் கலரு சான்றிதழ் தான் அதற்கான அத்தாட்சி.
நீங்கள் இதுமாதிரியான ஒரிஜினல் வின்டோஸ் வைத்திருப்பதால் முதல் நன்மை உங்கள் வின்டோசால் எளிதாக இணையம் வழி அவ்வப்போது மைக்ரோசாப்டின் "Windows update" செர்வரோடு தொடர்புகொண்டு உங்கள் கணிணியின் விண்டோசின் ஓட்டை ஒடசல்களையெல்லாம் சரியாக்கி கொண்டே வரும். இதனால் அநேக வைரஸ்களிடமிருந்தும் ஹேக்கர்களிடமிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். இன்னொரு நன்மை உங்கள் கணிணியில் என்ன பிரச்சனை வந்தாலும் மைக்ரோசாப்ட் ஐயா அவர்களின் சப்போர்ட் டிப்பார்ட்மென்டை தைரியமாகத் தொடர்புகொள்ளலாம்.
ஆனால் பெரும்பாலான நம்மவர்கள் செய்யும் தவறு என்னவென்றால் நம் மடிக்கணிணியோடு வந்த விண்டோஸ் விஸ்டா அல்லது எக்ஸ்பி Home edition ஆக இருப்பதால் அது வழி நிறைய சாதிக்க முடிவதில்லை. நொண்டது நொடிச்சதுக்கெல்லாம் அழும்.IIS இருக்காது.அது முடியாது.இது முடியாது என கரைந்துகொண்டே இருக்கும்.ஆனால் மடிக்கணிணியோ 4கிக் மெமரியுடனும் 300கிக் ஹார்ட் டிரைவுடனும் எதையும் தாங்க தயாரான நிலையிலிருக்கும்.
இவ்வேளைகளில் இருக்கின்ற உங்களின் ஒரிஜினல் வின்டோஸ் விஸ்டாவை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஒரு கிராக் செய்யப்பட்ட வின்டோஸ் செர்வரை உங்கள் மடிக்கணிணியில் நிறுவுவது அவ்வளவு புத்திசாலித்தனமல்ல.
இங்கு நீங்கள் விர்சுவல் செர்வரை பயன்படுத்தலாம்.அதாவது உங்கள் வின்டோஸ் விஸ்டாவினுள்ளேயே இன்னொரு வின்டோஸ் செர்வரை ஓட்டலாம்.இதனால் உங்கள் விஸ்டா ஒரிஜினலாக இருந்து கொண்டே உங்களுக்கு பாதுகாப்பைத் தரும் அதேவேளையில் கிராக்கப்பட்ட விண்டோஸ் செர்வரை விர்சுவர் செர்வராக உங்கள் மடிக்கணிணியில் ஓட்டுவதால் உங்களுக்கு கூழும் கிடைக்கும் மீசையும் பாதுகாப்பாயிருக்கும்.இதற்காக VMware Workstation அல்லது Microsoft Virtual PC போன்ற விர்சுவல் செய்யும் மென்பொருள்களை நீங்கள் பயன்படுத்தலாம். என்ன கொஞ்சம் காசு கேட்பார்கள். இதனால் அவைகளுக்கு பைபை சொல்லிவிட்டு இலவச விர்சுவலைசேசன் மென்பொருள் பக்கம் வரலாம்.சன் நிறுவனத்தின் திறந்த மூல படைப்பான VirtualBox-ஐ பயன்படுத்தலாம். இம்மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. ஒருமுறை முயன்றுபாருங்கள்.விடவே மாட்டீர்கள்.உண்மையிலேயே இதை பயன்படுத்துவது மிக எளிது.இவ்வளவு நாளாக இதை மிஸ் பண்ணியிருந்தோமே என்று பின்பு தோன்றும்.(மேலே படத்தில் லினக்ஸினுள் வின்டோஸ் ஓடுவதை காணலாம்)
Download Virtual box here.
http://www.virtualbox.org/wiki/Downloads
No comments:
Post a Comment