Tuesday, April 14, 2009

இணையத்தில் புதிது - ரியா நுட்பம்

இன்றைய நவீன இணைய உலகில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது.

முன்பெல்லாம் பக்கம் பக்கமாக தட்டெழுத வேண்டி இருப்பின், அதற்காக நமது கணினியில் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற மென்பொருளை நிறுவி அதன் மூலம் தட்டெழுதினோம்.

RIA - Rich Internet Applications

இப்போது இணைய தளத்திலேயே நேரடியாக தட்டி அதனால் விளைந்த கோப்பு ஒன்றை மட்டும் கணினியில் தரவிறக்கிக் கொள்கிறோம்.

http://www.zoho.com/

http://docs.google.com/

சில காலம் முன்பு வரை புகைப்படங்களில் மாற்றங்கள் தேவையெனில் அதற்காக போட்டோஷாப் போன்ற மென்பொருளைக் கணினியில் நிறுவி அதைப் பயன்படுத்தினோம்.

http://www.picnik.com/

http://www.picjuice.com/

இப்போது அதற்கு மாற்றாக இணையத்திலே புகைப்படங்களை ஏற்றி எடிடிங் வேலைகளை முடித்து இறுதியாகக் கிடைக்கும் புகைப்படத்தை நமது கணினிக்கு மாற்றிக்கொள்கிறோம்.

இப்போது ஒரு படி மேலே சென்று வீடியோக்களையும் இணையத்தளத்தில் ஏற்றி அங்கேயே எடிடிங் செய்யும் வசதியும் வந்துவிட்டது.

http://jaycut.com/

http://www.jumpcut.com/

இதற்குப் பெயர்தான் ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ். செல்லமாக ரியா.

எந்த ஒரு மென்பொருளையும் தரவிறக்கி நிறுவ வேண்டிய அவசியமின்றி அனைத்துச் செயல்களையும் இணைய தளத்திலேயே செய்ய வழிவகை வகுத்த புதிய தொழில்நுட்பமே RIA.

கலைச்சொற்கள்:
மைக்ரோசாப்ட் வேர்ட் - Microsoft Word
போட்டோஷாப் - Adobe Photoshop
புகைப்படத்தில் மாற்றம் செய்தல் - Photo Editing
எடிடிங் - Editing
ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ் - Rich Internet Applications

ரேப்பிட்ஷேர் தளத்திலுள்ள கோப்புகளை தேடுவதற்கு

கோப்புப் பகிர்வான் (File sharing) தளங்களான esnips.com, 4shared.com போன்றவற்றில் ஒருங்கிணைத்த தேடும் வசதி (built in search facility) உண்டு. ஆனால் ரேப்பிட்ஷேர் தளத்தில் இந்த உள்ளமைந்த தேடும் வசதி கொடுக்கப்படவில்லை.

Rapidshare Search Engine

Rapidshare Search Engine

ஏற்கனவே ஏற்றப்பட்ட கோப்பின் சுட்டி நமக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே அவற்றைத் தரவிறக்கம் செய்ய இயலும்.

உலகின் மிகப் பிரபலமான கோப்பு ஏற்றும் தளங்களில் ரேப்பிட்ஷேர் (Rapidshare) முக்கியமானது.

அலெக்சா (Alexa) தளத்தின் அறிக்கைப்படி, உலகில் அடிக்கடி பார்க்கப்படும் தளங்களில் ரேப்பிட்ஷேரானது பன்னிரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாம்.

இந்தத் தளத்தில் தேடுவதற்காக ஏராளமான தேடுபொறிகளும் (search engine) உருவாக்கப்பட்டன. அவற்றில் 15 தேடுபொறிகளை இங்கே தருகிறேன்.

1. RapidShare1
2. RapidShare Searcher
3. FileZ
4. LoadingVault
5. RapidOSearch
6. Rapidoogle
7. HellaFiles
8. RapidShare-Search-Engine
9. FileCrop
10. ThuVienPHP
11. RapidZilla
12. OplaHol
13. FileSearch
14. FileScoop
15. FilesBot

பெரிய அளவுள்ள கோப்புகளைத் துண்டு துண்டுகளாக்க

பெரிய அளவுள்ள கோப்புகளைத் துண்டு துண்டுகளாக்க

GSplit Large File Splitter

நேற்று ஒரு கோப்பினை டோரண்ட்(torrent) உதவியுடன் இணையிறக்கம் (download) செய்தேன். அதன் கொள்ளளவு 11GB. அதை நான் DVD ல் பதிவதற்கு முயற்சித்தேன்.

ஆனால் டிவிடி வட்டின் (DVD Disk) கொள்ளளவோ 4.7 GB தான். அதில் வழக்கமாக அதிகபட்சமாக 4.37GB வரைதான் நான் எழுதுவேன்.

11GB அளவுள்ள பெரிய கோப்பு (large file) அதுவும் ஒரே கோப்பாக உள்ளதை எப்படி DVDல் ஏற்றுவது? இதற்காக ஏதேனும் துண்டாக்கும் (splitter) மென்பொருட்கள் உள்ளனவா என இணையத்தில் தேடினேன்.

GSPlit என்கிற மென்பொருள் கிடைத்தது. இதன் உதவியுடன் மிக எளிதாக 3 கூறுகளாக ஆக்கினேன். மூன்று கூறுகளையும் தனித்தனி டிவிடிகளில் எழுதி பாதுகாப்பாக வைத்துவிட்டேன். இது ஒரு இலவச மென்பொருள் (freeware).

பல்லூடகங்களான (Multi media) இசை, பாட்டு, காணொளி (video), படங்கள், மிகப்பெரிய அளவிலான கோப்புகள் போன்றவற்றை சுக்குச்சுக்காக துண்டுதுண்டாக ஆக்கி டிவிடிகளில் ஏற்றுவதற்கு அருமையான இலவச மென்பொருள் இது என்றால் மிகையில்லை.

இப்படித் துண்டாக்கிய கோப்புகளை CD, DVD, USB, Zip Disk மற்றும் mobile phone களில் ஏற்றிக்கொள்ளலாம்.கோப்புப் பகிர்வான் (file sharing sites) தளங்களில் ஏற்றிப் பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்களுக்கு அனுப்பலாம். தரவிறக்கம் (download) செய்ய கீழ்க்கண்ட சுட்டியைச் சொடுக்கவும்.

Site : http://www.gdgsoft.com/gsplit/index.aspx

AMD யின் புதிய 3D இணைய உலாவி

AMD யின் புதிய 3D இணைய உலாவி

AMD நிறுவனம் செயலி (Processor)கள் செய்வதில் ஒரு முன்னனி நிறுவனம். அந்நிறுவனம் புதிய 3D இணைய உலாவியை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் பெயர் : AMD Fusion Media Explorer

AMD யின் புதிய 3D இணைய உலாவி

இந்த இணைய உலாவியை நிறுவ உங்களிடம் விண்டோஸ் விஸ்டா அல்லது அதற்க்கு பின் வந்த விண்டோஸ் இயங்குதளங்களில் உபயயோகப்படுத்தலாம்.

Download AMD FME beta

AMD யின் புதிய 3D இணைய உலாவி

AMD யின் புதிய 3D இணைய உலாவி

AMD நிறுவனம் செயலி (Processor)கள் செய்வதில் ஒரு முன்னனி நிறுவனம். அந்நிறுவனம் புதிய 3D இணைய உலாவியை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் பெயர் : AMD Fusion Media Explorer

AMD யின் புதிய 3D இணைய உலாவி

இந்த இணைய உலாவியை நிறுவ உங்களிடம் விண்டோஸ் விஸ்டா அல்லது அதற்க்கு பின் வந்த விண்டோஸ் இயங்குதளங்களில் உபயயோகப்படுத்தலாம்.

Download AMD FME beta

இலவச Illustrated C# 2008 மென்புத்தகம்

இலவச Illustrated C# 2008 மென்புத்தகம்



நீங்கள் கணினி துறையில் ஒரு நிரலரா? (Prgorammer) ah ? C# படிக்க ஆர்வம் இருக்குமே ஆனால் இதோ உங்களுக்காக Illustrated C# 2008 மென்புத்தகம் இலவசமாக இறக்கிக் கொள்ளலாம்.

இலவச Illustrated C# 2008 மென்புத்தகம்

இந்நூலை எழுதியவர் Daniel Solis இந்நூலை படிக்க நீங்கள் C++ அல்லது VB நிரல்கள் தெரிந்தால் போதும் .

இந்த நூல் 730 பக்கங்கள் கொண்டது அதில் உள்ளவற்றை பல விதமான படங்களை வைத்து அழகாக எழுதியுள்ளார் Daniel Solis.


Illustrated C# 2008 மென்நூலை இறக்குதல் செய்ய இங்கே சொடுக்கவும்.